×

தாமிரபரணி நதியுள்ள, நெல்லையப்பர் பூமிக்கு வந்ததில் பெருமையடைகிறேன்: நெல்லையில் அமித்ஷா பேச்சு

நெல்லை: தாமிரபரணி நதியுள்ள, நெல்லையப்பர் பூமிக்கு வந்ததில் பெருமையடைகிறேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. தேர்தல் பிரசாரத்துக்கும் இன்றும், நாளை மட்டுமே எஞ்சியுள்ளதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். தலைவர்கள் தொகுதிகளில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அம்பை அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளர் ஜெரால்டு, திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்; தாமிரபரணி நதியுள்ள, நெல்லையப்பர் பூமிக்கு வந்ததில் பெருமையடைகிறேன். தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சாமானிய மக்களின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் கடனை ரத்து செய்து சாமானியர்களின் கனவை நிறைவேற்றியுள்ளார் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மோடி கொண்டுவந்தார். தமிழக கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பறைசாற்றுகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி விவசாயிகள், வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள், தமிழக மீனவர்களை பற்றி சிந்திக்கிறார். குடியரசு தலைவர் பதவியில் பட்டியல் பிரிவை சேர்ந்தவரை அமரவைத்திருக்கிறோம்; 7 பிரிவை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற அறிவிப்பை கொடுத்தவர் பிரதமர். தமிழ்நாட்டில் உள்ள ஏழைகள், பாமர மக்களை உயர்த்த வேண்டும் என்ற கொள்கையில் பிரதமர் மோடி இருக்கிறார் என தெரிவித்துள்ளார். …

The post தாமிரபரணி நதியுள்ள, நெல்லையப்பர் பூமிக்கு வந்ததில் பெருமையடைகிறேன்: நெல்லையில் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani River ,earth ,Amitsha ,Nelli ,Paddy ,Home Minister ,Nelliyapar ,Tamil Nadu ,Copper River ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...